www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. படத்தோட ஷூட்டிங் எப்போ முடியும்? FANS-க்கு செம சர்ப்ரைஸ் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Vijay Varisu Movie Shooting Update

Also Read | சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஜய் ரசிகர்கள்.. வாரிசு பட போஸ்டருடன் வைரலாகும் புகைப்படம்!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Vijay Varisu Movie Shooting Update

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Varisu Movie Shooting Update

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு குறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Vijay Varisu Movie Shooting Update

இன்று (01.12.2022) வாரிசு படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் நிறைவு செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் ஒட்டுமொத்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும். இன்றைய வாரிசு படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள EVP Film City-யில் நடக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இவானா 😍.. கூட நம்ம ஆளு வேற வெளுத்து வாங்குறாரு🔥

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Shooting Update

People looking for online information on Varisu, Varisu Movie Shooting Update, Vijay, Vijay Varisu Movie Shooting will find this news story useful.