Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

8 பேக் உடற்கட்டில் ஷாருக்கான்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பதான் படத்தின் மிரட்டலான BTS PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்' படத்தின் BTS புகைப்படம் வெளியாகி உள்ளது.

Shahrukh Khan pathaan movie New BTS Image

Also Read | திரையுலகுக்கு பேரிழப்பு.. அனிருத் -தின் தாத்தா... இசையமைப்பாளர் & இயக்குனர் SV ரமணன் மறைவு.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

Shahrukh Khan pathaan movie New BTS Image

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. மறைந்த பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ராவால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகும்.

Shahrukh Khan pathaan movie New BTS Image

சில நாட்களுக்கு முன் ஷாருக்கான், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின்  முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்காக ஷாருக்கான் பிரத்யேகமாக தலைமுடி வளர்த்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சி மூலம் 8 பேக் வைத்து நடித்தார். இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாருக்கான் தனது 8 பேக் உடற்கட்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படத்தை ஷாருக்கான் மனைவி கௌரி கான் வரவேற்றுள்ளார்.

Shahrukh Khan pathaan movie New BTS Image

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட பரபர அறிக்கை

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan pathaan movie New BTS Image

People looking for online information on Pathaan Movie, Pathaan movie BTS image, Shah Rukh Khan will find this news story useful.