LIGER D Logo Top
www.garudabazaar.com

ஷாருக்கான் & தீபிகா படுகோன் நடிக்கும் 'பதான்'.. தெறியான ஜான் ஆபிரகாம் கேரக்டர் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்' படத்திலிருந்து ஜான் ஆபிரகாம் கதாபாத்திரத்தின்  போஸ்டர் வெளியாகி உள்ளது.

Pathaan Movie John Abraham Look Motion Poster Released

Also Read | ‘நலமுடன் இருக்கார்’.. மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா.. உடல்நிலை குறித்த Exclusive தகவல்.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

Pathaan Movie John Abraham Look Motion Poster Released

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஷாருக்கான், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின்  முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

Pathaan Movie John Abraham Look Motion Poster Released

இந்த படத்திற்காக ஷாருக்கான் பிரத்யேகமாக தலைமுடி வளர்த்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் வைத்து நடித்தார். இது தொடர்பான புகைப்படங்களை ஷாருக்கான் வெளியிட்டு இருந்தார். இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் பதான் படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோனின் கதாபாத்திர போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் ஜான் ஆபிரகாம் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் & கிராபிக்ஸ் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Pathaan Movie John Abraham Look Motion Poster Released

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. மறைந்த பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ராவால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகும்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Also Read | பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் GOLD.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய 'வலிமை' வினியோகஸ்தர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pathaan Movie John Abraham Look Motion Poster Released

People looking for online information on John Abraham, Pathaan Movie, Shah Rukh Khan will find this news story useful.