COBRA D Logo Top
www.garudabazaar.com

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.. வைரலாகும் போட்டோஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.

Shah Rukh Khan Celebrated Ganesh Chaturthi in Home

Also Read | ராமேஸ்வரம் கோயில் யானையுடன் நடிகர் சசிகுமார்.. அவரே பகிர்ந்த அருமையான போட்டோ!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும்  ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ப்டமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. பின்னர் சிலகாலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் ஷாருக்கான்.

Shah Rukh Khan Celebrated Ganesh Chaturthi in Home

இந்நிலையில் ஷாருக்கானின் அடுத்த  அடுத்த படத்தை இயக்க அட்லி ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shah Rukh Khan Celebrated Ganesh Chaturthi in Home

இதில் ராஜ்குமார் ஹிரானியின் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் ஷாருக்கான் வெளியிட்டார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்திற்கு Dunki  என பெயரிடப்பட்டுள்ளது. Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Shah Rukh Khan Celebrated Ganesh Chaturthi in Home

அட்லி - ஷாருக்கான் படத்திற்கு  'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஜவான் படம், ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஒரே ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து பூஜைகள் நடத்தி, அலங்காரம் செய்து, சாமி கும்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  "கணபதிஜியை லில் ஒன் மற்றும் நான் வீட்டிற்கு வரவழைத்தோம்....பின் மோதங்கள் சுவையாக இருந்தது...கற்றல் என்பது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உங்கள் கனவுகளை நினவாக்க முடியும். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" என ஷாருக்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Also Read | வெந்து தணிந்தது காடு 'இசக்கி புரோட்டா'.. இந்த பிரபல ஹோட்டல்ல மட்டும் தான் கிடைக்குமாம்!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Celebrated Ganesh Chaturthi in Home

People looking for online information on Ganesh Chaturthi, Shah Rukh Khan, Shah Rukh Khan Celebrates Ganesh Chaturthi will find this news story useful.