www.garudabazaar.com

பயனடைந்த 1000 குடும்பங்கள்.. பிரபல நடிகரை வாழ்த்தி இயக்குனர் அட்லி நெகிழ்ச்சியான ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரை பாராட்டி இயக்குனர் அட்லி ட்வீட் செய்துள்ளார்.

Atlee Tweet about Shah Rukh Khan and Jawan Movie Chennai Shooting

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக நண்பன், எந்திரன் படங்களில் பணியாற்றியவர் அட்லி.

பின்னர் தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

Atlee Tweet about Shah Rukh Khan and Jawan Movie Chennai Shooting

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'   படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது, பிறகு மும்பையில் சிலநாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது  சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பகிர்ந்து இயக்குனர் அட்லி ஒரு நெகிழ்ச்சியான ட்வீட்டை ட்வீட் செய்துள்ளார். அதில், " நன்றி சார், நீங்கள் இங்கு வந்திருப்பது ஒரு மரியாதை & மகிழ்ச்சி சார், என் கேரியரில் மறக்கமுடியாத காலம் இது, சென்னையில் படப்பிடிப்பு நடந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி சார், இதனால் 1000 குடும்பங்கள் பயனடைந்தனர். “KING IS A KING ALWAYS..”  லவ் யூ சார் ❤️ விரைவில் மும்பையில் சந்திப்போம் சார் ❤️" என பதிவிட்டுள்ளார்.

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா  நடிக்கிறார். நடிகை பிரியாமணி ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Tweet about Shah Rukh Khan and Jawan Movie Chennai Shooting

People looking for online information on Atlee, Jawan, Shahrukh Khan, SRK will find this news story useful.