www.garudabazaar.com

தளபதி விஜய் கொடுத்த விருந்து.. அனிருத் கூட பார்ட்டி! நெகிழ்ச்சியான ஷாருக்கான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் சென்னை ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Shah Rukh Khan Tweet about Vijay Atlee Anirudh Rajinikanth

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் ஒரு இந்தி படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி, ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Shah Rukh Khan Tweet about Vijay Atlee Anirudh Rajinikanth

சமீபத்தில் இயக்குனர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு ஷாருக்கான் மற்றும் விஜய், அடலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " என்ன ஒரு 30 நாட்கள் ரெட் சில்லி நிறுவனத்தின் சிறப்பான பணி. தலைவர் ரஜினிகாந்த் எங்கள் செட்டுக்கு வந்திருந்தார். நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது. அனிருத் ரவிச்சந்திரனுடன் பார்ட்டி. விஜய் சேதுபதி உடனான ஆழமான உரையாடல். தளபதி விஜய் வைத்த சுவையான விருந்து. நன்றி அட்லி & பிரியா உங்கள் கவனிப்புக்கு. சிக்கன் 65 சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்." என ஷாருக்கான் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Tweet about Vijay Atlee Anirudh Rajinikanth

People looking for online information on Anirudh, Atlee, Shah Rukh Khan, Vijay will find this news story useful.