விஜய் சேதுபதி படம், விக்ரம்-வேதா டீமின் வெப் சீரிசுக்குப் பிறகு ஹாலிவுட் போகும் இயக்குநர்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் பார்த்திபனின் நடிப்பு-இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ’இரவின் நிழன்’ என்ற தனது அடுத்த ப்ராஜக்டின் போஸ்டரை வெளியிட்டிருந்த பார்த்திபன் இந்த படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து தன் அடுத்தடுத்த ப்ராஜக்டுகள் குறித்து இன்று தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்:
’02022020 இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி...
விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்',
Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்'என்ற Web series,
சிம்ரனின் சொந்தப்படம்,
எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம்,
சமீப பிரபல இயக்குனரின் படம்,
மற்றும் என் 'இரவின் நிழல்'
இன்னும் சில! இவையன்றி...
Really its a great pleasure for me to announce that.....
ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்?
Yeah! இவ்வருட கடைசியில்
ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்...( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon!இதுவே நிகில்-முருகன் அருள் வாக்கிற்காக! மீண்டும் ஒரு செய்தி 20/02/2020-ல் போட கட்டளையிட்டிருக்கிறார்!’ என் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்கள் உட்பட பார்த்திபன் நடிக்கும் மற்ற ப்ராஜக்டுகள் பற்றிய இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.