''சனம் ஷெட்டி அவருடன் தனி அறையில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கு'' - தர்ஷன் பரபரப்பு குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சனம் ஷெட்டி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பிக்பாஸ் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சனம் ஷெட்டி, ''எனக்கும் பிக்பாஸ் தர்ஷனுக்கு மே 12 நிச்சயதார்த்தம் நடந்தது. பிக்பாஸ் போய்ட்டு வந்ததும் தர்ஷன் மாறிட்டாரு. பேசணும்னு முயற்சி செய்த பொழுது என்னை அவமானப்படுத்தினார்.

Bigg Boss Tharshan Condemned Sanam Shetty's Allegation

அதனால அவர் மேல சீட்டிங், ஃபிராடு, பெண்ணை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார். பின்னர் நிச்சயதார்த்த புகைப்படம், கல்யாண பத்திரிக்கைகளை பத்திரிக்கையாளர்கள் முன்பு காண்பித்தார்.

இந்நிலையில் சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தர்ஷன் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ''2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். சனம் ஷெட்டி அவ்வப்போது எனக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சமயத்தில் ரம்யா சத்யா திருமணத்திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்.

 பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று சனம் கூறியுள்ளார் அதற்கான ஆதாரம் இருந்தால் அவரை கொடுக்க சொல்லுங்கள்.பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தன்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.  இவ்வளவு நடந்த பிறகு அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

''சனம் ஷெட்டி அவருடன் தனி அறையில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கு'' - தர்ஷன் பரபரப்பு குற்றச்சாட்டு வீடியோ

Entertainment sub editor