விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் ரொமான்ஸ் - காதலர் தின ஸ்பெஷலாக வெளியான போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு ரொமான்டிக் காமெடி ஜானரில் வெளியான 'நானும் ரௌடி தான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத்தின் பாடல்கள் அந்த படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது.

Vijay Sethupathi, Nayanthara, Samantha's KaathuVaakula Rendu Kaadhal title Look Poster

இந்த காம்போ மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளனர். கூடுதலாக இந்த கூட்டணியில் சமந்தாவும் இணைந்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார். செவன்ஸ் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்த தயாரிக்கவுள்ளன.

Entertainment sub editor