"20 நாளைக்கு முன்னாடி போன் பண்ணாரு.. அப்போது கூட".. மயில்சாமி பற்றி சார்லி உருக்கம்..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் சினிமா திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் Throwback வீடியோ!!
57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி மக்களை சிரிக்க வைத்தவர். இந்த சூழ்நிலையில் அவருடைய இழப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சார்லி தனது நண்பன் மயில்சாமி மறைவு குறித்து பேசுகையில்,"1988-89 காலகட்டத்தில் தான் முதல் முறையாக மயில்சாமியை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பிரதிபலன் பாராமல் உதவும் மனம் கொண்டவன். 20 நாளைக்கு முன்பு கூட போன் செய்து 'மாமா ஒரே ஒரு சீன் இருக்குன்னு கூப்பிட்டாங்க நடிச்சுட்டு வந்தேன். உனக்கு நல்ல ரோல் இருக்காம் சொன்னாங்க' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். நகைச்சுவை கலைஞர்களை போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள நினைப்பவன். நடிகர் விவேக்கின் மறைவு எங்கள் இருவரையும் பெரிய அளவில் பாதித்தது.
Images are subject to © copyright to their respective owners.
"இப்போது மயில்சாமி மறைவு பெரும் மன வேதனையை அளித்திருக்கிறது. விவேக்கின் மறைவு ஏற்படுத்திய துயரத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். இப்போது என் நண்பன் மயில்சாமியின் மறைவு பற்றி நான் யாரிடம் பேசப் போகிறேன்? அவருடைய இரண்டு மகன்களும் என்னிடம் அன்பாக பழகுவார்கள். அவங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் எங்களது குடும்பத்தில் ஒருவர் மாதிரி. வார்த்தைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்லலாம். ஆனால் இந்த சோகம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது."
Images are subject to © copyright to their respective owners.
"உடம்ப பாத்துக்கோ என அடிக்கடி சொல்வேன். நான் சொல்லும் போது கவனமாக கேட்பான். முதல் முதலில் கார் வாங்கும் போது கூட என்னிடம் சொல்லிட்டு தான் போனான். 'மாமா நீ சொல்லு அப்போ தான் சரியா இருக்கும்' என ஷோரூம் மேனேஜரிடமே என்னை பேச சொன்னான். அந்த அளவுக்கு நெருக்கமாக என்னுடன் இருந்தவன். எப்போதும் சிவன் பற்றிய நினைப்பாகவே இருப்பவன் சிவராத்திரியிலேயே மரணமடைந்திருக்கிறான். சினிமாவில் ஒரு கலைஞர் இறந்து விட்டால் உடனடியாக அங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வான். அந்த இழப்பை ஈடுகட்ட முயற்சிப்பான். இப்போது அவருடைய இழப்பை யார் ஈடு கட்டுவது என நினைக்கும் போதே வேதனையாக இருக்கிறது" என்றார்.
Also Read | சத்குரு ஜக்கி வாசுதேவ்-வுடன் GP முத்து.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! இதோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Vivek About Mayilsamy Throwback Video Emotional
- Super Star Rajinikanth About Mayilsamy Death On Maha Shivaratri
- Mayilsamy Last Singing Video In Temple Shivaratri
- Super Star Rajinikanth About Actor Mayilsamy Last Wish
- Super Star Rajinikanth Condolences To Actor Mayilsamy Demise
- Badava Gopi Heartfelt Memories About Mayilsamy
- Actor Singamuthu Emotional Speech About Mayilsamy
- Scissor Manohar About Mayilsamy Heartwarming Video
- Mayilsamy Demise Thambi Ramaiyah Condolences
- Actor Mayilsamy Dubbing Work Before He Dies மயில்சாமி
- Fan Took Last Selfie With Late Actor Mayilsamy Viral Post
- Mayilsamy Demise Funeral MS Bhaskar Cries Video
தொடர்புடைய இணைப்புகள்
- "Mayilu ஏன்டா சீக்கிரம் போயிட்ட? 35 வருஷ நட்பு, ஒளிவு மறைவு இல்லாமல்"... 😭 Ramesh Kanna Emotional
- "பல கோடிகளுக்கு சொந்தக்காரர்.. பணத்துல இல்ல.." உடைந்து பேசிய Cool Suresh..! | Mayilsamy | RIP
- "மாப்ள மயிலு" 😭 திரும்பி வா, இறப்பு என்னால தாங்கவே முடியல - Scissor Manohar Interview
- "ACTIVE-ஆ இருக்க மனிஷனுக்கே இப்படி ஆகிடுச்சே..!" கோபிநாத் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் பேட்டி
- "உரிமையோடு எனக்கு PHONE பண்ணுவான்..! ஆனா இப்போ..😥" நடிகர் சத்யராஜ் கண்ணீர் பேட்டி
- பெரும் சோகத்தில் விழுந்த திரை பிரபலங்கள்..! கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி
- "கடைசி நாள் என்கிட்ட மயில்சாமி சொன்ன வார்த்தை..!" மனம் உடைந்து அழுத ரேகா நாயர் பேட்டி
- "கடைசி வரைக்கும் உதவி செஞ்சே போயிட்டாரு..." மயில்சாமியை நினைத்து கலங்கிய பிரபலங்கள் பேட்டி
- "எல்லாரையும் வாழ வச்சிட்டு இடி விழுந்த மாதிரி விட்டுட்டு போயிட்டாரே..!" பிரபலங்கள் கண்ணீர்
- 🔴LIVE: MAYILSAMY திடீர் மரணம், கண்கலங்கிய திரை பிரபலங்கள்
- "பழகாதவங்களுக்கு கூட அவ்ளோ உதவி பண்ணிருக்காரு..!" நடிகர் சூரி EMOTIONAL பேட்டி
- "பல கோடிக்கு சொந்தக்காரர் மயில்சாமி.. பணத்தில் இல்ல.. மனசுல..!" பிரபலங்கள் இரங்கல் - பேட்டி