www.garudabazaar.com

இறப்புக்கு முந்தைய இரவில் இறைவனுக்காக பாடிய மயில்சாமி.. வைரலாகும் கடைசி வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானது அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Mayilsamy last singing video in temple shivaratri

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நண்பர் நட்டி, இயக்குனர் செல்வராகவனுக்கு".. பகாசூரன் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்!!

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார்.  2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.

Mayilsamy last singing video in temple shivaratri

Images are subject to © copyright to their respective owners.

அப்படி ஒரு சூழலில், தற்போது காலமாகி உள்ளார் மயில்சாமி. முன்னதாக அதிகாலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, அவர் தன் குடும்பத்தினரால் சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் நடிகர் மயில்சாமியின் மரணத்தை உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.

Mayilsamy last singing video in temple shivaratri

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு மயில்சாமி கடைசியாக பாடிய வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

தீவிர சிவபக்தனான மயில்சாமி, இரவில் மகா சிவராத்திரி நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார். கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில், பிரபல இசை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பக்தர்களுடன் சேர்ந்து பக்தியில் மூழ்கி போயிருந்த மயில்சாமி, பின்னர் பாடவும் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "மகா சிவராத்திரி".. ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. பரவச நடனம் ஆடிய நடிகை.. வீடியோ!!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy last singing video in temple shivaratri

People looking for online information on Mahashivaratri 2023, Mayilsamy, Mayilsamy last singing video will find this news story useful.