Breaking : OTT-யில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர்?... தளபதி ரசிகர்களுக்கு நல்ல செய்தி... உறுதிசெய்யப்பட்ட தகவல்..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்ப, கடந்த ஏப்ரல் 9-ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தற்போது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படம் OTT ஆன்லைன் மூலம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பல படங்களும் இந்த முறையில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் படக்குழு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். அதாவது மாஸ்டர் திரைப்படம் OTT-யில் ரிலீஸ் ஆகாது என்றும். கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்கள் கவலை பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.