Corona : பிரபல நடிகருக்கு கோயிலில் கல்யாணம்... திருமண பணத்தை கொரோனா நிதியாக அனுப்பினார்..!
முகப்பு > சினிமா செய்திகள்மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் மணிகண்டன் தன் காதலியை கொரோனா ஊரடங்கு நேரத்திலும் கரம் பிடித்தார். விருது நடிகர் மணிகண்டன் தனது 'கம்மட்டிபோடம்' படம் மூலம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர்.

இந்நிலையில் இவருக்கும் காதலி அஞ்சலிக்கும் பெரியோர்களால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் திருமணம் நடைபெறுமா என்ற நிலை இருந்தது. இந்நிலையில் வெகு சில உறவினர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் அவர் தன் காதலியை கரம் பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.