www.garudabazaar.com

Bigg Boss OTT-ல இவங்க 2 பேருமா? டாப் கீரில் போகும் ரசிகர்கள்! BiggBoss Ultimtae Grand Launch கலர்ஃபுல் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss 5 Tamil : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நிறைவடைந்துள்ளது.

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

Bigg Boss Ultimate

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடக்கூடிய பிக்பாஸ் அல்டிமேட் எனும் புதிய பெயரிலான நிகழ்ச்சியாக வரவிருப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக நடந்த 4 பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும், 7 நாட்களும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

Bigg Boss OTT

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

இந்த அறிவிப்பினை நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே நடந்தபோது, அந்த அரங்கத்திலேயே வைத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அறிவித்திருந்தார். அதில் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறியிருந்தார்.

வியூகம் புதிது..

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினேகன், வனிதா, ஜுலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி போன்றவர்கள் அதிகாரப்பூர்வ போட்டியாளர்களாக ப்ரோமோக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே முந்தைய சீசன் போட்டியாளர்கள். முன்னதாக நடிகர் கமல்ஹாசன், “போட்டியாளர்கள் புதியவர்கள் அல்ல என்றாலும், அவர்களின் வியூகம் புதிது” என்றும், “தொலைச்ச இடத்துல தான் தேட முடியும், தோத்த இடத்துல தான் ஜெயிக்க முடியும்!” என்றும் கூறியிருந்தார்.

பாலா, அனிதா சம்பத்?

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

இவர்களுடன் தற்போது பாலா, அனிதா சம்பத் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தற்போதைய ப்ரோமோவின் மூலம் தெரிகிறது. அப்படியானால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் பிரபலமானவரான பாலா முருகதாஸ், மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்டோர் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியான இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்களா?.  செம்ம .. செம்ம.. என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

கிராண்ட் லாஞ்ச்

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் குறித்த அறிவிப்புடன் கிராண்ட் லாஞ்ச் நிகழ்வு ஜனவரி 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரலையில் இந்த போட்டி தொடங்கப்படவிருக்கிறது. இத்துடன் இதே நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் மட்டும் தொலைக்காட்சி ஆடியன்ஸ்காக விஜய் டிவியில் அதே நேரத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கலக்கலான கலர்ஃபுல் ப்ரோமோ

இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா மற்றும் அனிதா சம்பத் ஆகியோரை கண்டதுமே அவர்களது ரசிகர்கள் ட்விட்டரில் அனல் தெறிக்கும் கமெண்டுகளை கொடுத்து, இவர்களுக்கு வெல்கம் பேக் சொல்லி வருகின்றனர். குறிப்பாக இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் நடனம் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்ததுமே ரசிகர்கள் உற்சாகம் ஆகிவிட்டனர்.

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

ரசிகர்கள் எண்ணம் ஈடேறுமா?

எனினும் இந்த நிகழ்ச்சி எத்தனை நாள் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். பிறமொழிகளில் ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 70 முதல் 98 நாட்கள் வரை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே சிலர், இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்ஸை தொகுத்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என விஜய் டிவியில போடுங்க சார் என்றும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

Also Read: CWC-ல நிஜமாவே அடிக்குறாங்களா?.. இத ஒரு Show-ஆ பாருங்க.. Actual-ஆ ஷூட்ல இதான் நடக்கும்!.. வித்யூலேகா Post!

OTT Bigg Boss Ultimate grand launch promo bala anitha sampath

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss OTT Anitha Sampath, Bigg Boss OTT Bala, Bigg Boss OTT Grand Launch, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Grand Launch, DisneyHotstar Tamil, DisneyPlusHotstar Tamil, KAMALHAASAN will find this news story useful.