www.garudabazaar.com

நீங்கலாம் மைக்கேல் ஜாக்சன் குடும்பம்.. ஃபினாலேவில் அமீரை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

கிராண்ட் ஃபினாலே 

இந்த நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றார். ரசிகர்களாக் ராஜூ பாய் என அழைக்கப்படும் ராஜூ, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஸ்கிரிப் ரைட்டராக பணிபுரிந்ததுடன், புரோகிராம் புரொடியூசராகவும் இருந்துள்ளார். அத்துடன் சீரியல்களிலும், நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார் ராஜூ.

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

ராஜூ வெற்றி

ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்த பின்னர், அவருக்கு பிக்பாஸ் கோப்பை வழங்கப்பட்டதுடன், 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா 2வது வின்னராக, அதாது ரன்னர் அப்-ஆக அறிவிக்கப்பட்டார்.

Also Read: தாமரை விசயத்துல இதை அன்றே கணித்த கமல்.. ஃபினாலேவில் அவரே சொன்ன வார்த்தை!

முன்னதாக இந்த ஃபினாலே நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் மீதம் இருந்தனர். 

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

இவர்களுள் நிரூப்பை கண்ணை கட்டி வெளியே அழைத்துவந்தனர். ஆம், நிரூப் முதலில் எலிமினேட் ஆனார். அதன் பிறகு அமீர் மற்றும் பாவனி உள்ளிட்டோர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகினர். 

அடுத்த அமீராக ஆக வேண்டும்

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் அமீரை அழைத்து பேசியிருந்த பிக்பாஸ், “அமீர் அனைவரும் உங்களை அடுத்த பிரபுதேவாவாக பார்க்க விரும்பலாம். ஆனால் நான் உங்களை அடுத்த பிரபுதேவாவாக பார்க்க விரும்பவில்லை.

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

அடுத்த அமீராக நான் ஆக வேண்டும் என அடுத்து வருபவர்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறோம்” என சொல்லி மோட்டிவேட் செய்து வாழ்த்தியிருந்தார்.

மைக்கேல் ஜாக்சன் 

அதன் பின்னர் ஃபினாலேவில் அமீரை, நீங்கள் எல்லாம் மைக்கேல் ஜாக்சன், இந்தியாவில் குரு தத் உள்ளிட்ட சில புகழ்பெற்ற நடனக் கலைஞர்களின் குடும்பம் என சொல்லி மோட்டிவேட் செய்து நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

மேலும் தானும் பிரபுதேவா முதலியோர் எல்லாம் முதலில் நடனத்தில் கால் பதித்து, பின்னர் அதன் மூலம் நடிப்பு உள்ளிட்ட கிடைத்த வாய்ப்புகளில் கவனம் செலுத்தியதாகவும் கமல் குறிப்பிட்டார்.

Also Read: ‘இயேசு 30 வயசுல அற்புதம் நிகழ்த்தினார்’.. தீர்க்கதரிசி ‘ராஜூ’ சொன்னது நியாபகம் இருக்கா?

தொடர்புடைய இணைப்புகள்

amir should be like michel jackson kamalhaasan bigg boss 5 finale

People looking for online information on Amir dance video, Bigg boss 5 amir, Bigg boss 5 tamil raju, Bigg boss amir dance video, Bigg Boss Title Winner, Dance, Dancing jodi, Kamal Haasan, Michel jackson, Prabhu Deva, Raju title winner, Raju title winner bigg boss, Vijay tv dance will find this news story useful.