www.garudabazaar.com

அதென்னயா குறும்படம்?.. சோதிக்காதீங்கடா!.. Bigg Boss Ultimate-க்கு வரும் பிரபல போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss OTT Promo: பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் 2வது போட்டியாளர் குறித்த விபரம் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

Bigg Boss OTT Bigg Boss Ultimate 2nd contestant promo

Bigg Boss 5வது சீசன் ஃபினாலே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வழக்கமான சீசன் போல முடிவடையவில்லை. ஆம், அந்த சீசனின் கிராண்ட் ஃபினாலேவில் தான் பரபரப்பான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. ஆம், அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிக்பாஸ் ஓடிடி குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

Bigg Boss OTT

அந்த அறிவிப்பில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கு பெயர் பிக்பாஸ் அல்டிமேட் என்றும், 24 மணி நேரமும் இதனை தமிழில் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் காண முடியும் என்றும் அறிவித்திருந்தார். அத்துடன், அந்த நிகழ்ச்சியிலும் தன் பங்களிப்பு இருக்கப் போவதாக குறிப்பிட்ட நடிகர் கமல்ஹாசன், அந்த நிகழ்ச்சி முந்தைய சீசன் போட்டியாளர்களை கொண்டு நடத்தப்படவிருப்பதாக தெரிவித்தார்.

Bigg Boss OTT முதல் போட்டியாளர்

இதனைத் தொடர்ந்து இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் அந்த முதல் போட்டியாளர் யார் என்கிற கேள்வி ரசிகர்களிடையே தீயாய் பரவி இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்மையில் வெளியான ப்ரோமோவில் சினேகன் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இது தொடர்பான ப்ரோமோவும் வெளியானது.

தோத்துப் போன வெறுப்போட, திரும்ப வரேன் நெருப்போட

அந்த ப்ரோமோவில் கவிஞரும் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான சினேகன் பேசும்போது, “தோத்துப் போன வெறுப்போட, திரும்ப வரேன் நெருப்போட” என்று கவிதை வாசித்திருந்தார். முன்னதாக பிக்பாஸ் ஓடிடி குறித்து கமல் பேசியிருந்த ஒரு ப்ரோமோவில், “தொலைச்ச இடத்துல தான் தேட முடியும். தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார். 

Bigg Boss OTT 2வது போட்டியாளர்

Bigg Boss OTT Bigg Boss Ultimate 2nd contestant promo

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஓடிடியில், அதாவது 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி ஒரு போட்டியாளராக கலந்துகொள்ளவிருக்கிறார்.

இது தொடர்பான ப்ரோமோ தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டார் தமிழின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகியுள்ளது. தற்போது பிரபல மாடலாக வலம் வரும் ஜூலி, முன்னதாக பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்கேற்ற போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Rolls Royce tax விவகாரத்தில் விஜய் பற்றி நீதிபதியின் எதிர்மறை கருத்து.. சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss OTT Bigg Boss Ultimate 2nd contestant promo

People looking for online information on BiggBossOTT, BiggBossUltimate, DisneyPlusHotstar, Juliana, Julie, July, Kamal Haasan, Snekan, Snekhan, Vijay Television, YaaruAnthaHousemate will find this news story useful.