www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் ஹீரோ - கமல் புரொடியூசர்! .. BiggBoss-ல் firstlook! டைரக்டர் பற்றி ஆச்சரிய தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிப்பது குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Bigg Boss 5 SK21 kamalhaasan Sivakarthikeyan announce

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து..

அதன்படி சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கமல்ஹாசன் தம்முடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் எம்.டி விவேக் வருகை தந்து பேசினார். 

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி குறித்து கமல்

முன்னதாக இப்படத்தின் இயக்குநர் குறித்து பேசிய கமல்ஹாசன், “ரங்கூன், சின்னத்திரையில் என்னை பல முறை இயக்கியிருக்கிறார். திரைப்பட டெக்னின், சமயோஜிதம், பதட்டமான சூழ்நிலையில் தனித்துவமான சூழ்ச்சி, பொய் புரட்டு எதுவும் இருக்காது. இது அத்தனையும் இந்த வயதில் இருப்பது ஆச்சரியம். அவ்வளவு பொறுமையும் நிதானமும் கொண்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி” என்று அறிமுகம் கொடுத்து மேடைக்கு அழைத்தார்.

ஹீரோ சிவகார்த்திகேயன் பற்றி கமல்

இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி பேசிய கமல்ஹாசன், “தாங்கி பிடிக்க எந்த பின்னணியும் இல்லாதவர், ஈகை, வீரம், நட்பு, காதல் என எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஆர்வம் கொண்ட இளைஞன், கடுமையான உழைப்பாளி, இவர் பிரபலமான ஹீரோ, முதலில் இருந்த மாதிரியே இன்றும் ஒரு மேடை கிடைத்தால் அனைவரையும் மகிழ்விக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!” என அறிமுகம் கொடுத்து அழைத்தார்.

Also Read: "இந்த வேல தான் பாத்துட்டு இருந்தேன்! எத்தனையோ STARS-க்கு" .. அழுதுகொண்டே ராஜூ ரிவீல் செய்த உண்மை!

சிவகார்த்திகேயனின் பேச்சு

மேலும் இப்படம் குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,  “எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்னு தெரியல. பல தியேட்டர்களில் அவர் பெயரை பார்த்து வளந்துருக்கேன். ஆனால் கமல்ஹாசன் வழங்கும் என பதிவிட்டு நான் நாயகனாக படம் பண்ணும் அறிவிப்பு எனக்கு மிகப்பெரிய விசயம், அதற்காகவே மேலும் உழைப்போம். இயக்குநர் ராஜ்குமார் அண்ணனை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன்.

எப்பவுமே ஆபீஸில் இருப்பார். ஷோவை பற்றியே சிந்திப்பார். வேலை செய்துகொண்டே இருப்பார். கடின உழைப்பாளி. இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ஆர்வமாக இருக்கிறேன். ஸ்பைடர் மேன் உட்பட பெரும் படங்களை தயாரித்த நிறுவனம் சோனி. கமல் சார் & அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டார்.

Also Read: பரபரப்பு எலிமினேஷன்!.. 105வது நாள் .. #BiggBoss கிராண்ட் ஃபினாலேவில் அறிவித்த கமல்ஹாசன்!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 5 SK21 kamalhaasan Sivakarthikeyan announce

People looking for online information on Kamal Haasan, RaajKamal film International, Sivakarthikeyan, SK21, Sony Pictures Networks India will find this news story useful.