www.garudabazaar.com

‘மாஸ்டர்’ மகேந்திரன் நடிக்கும் புது படம்.. கமல் பாடலில் இருந்து செம்ம குஷியான டைட்டில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மகேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல், அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தற்போது வெளியாகியுள்ளது.

actor Mahendran next movie kamalhaasan movie song lyrics title

‘மாஸ்டர்’ மகேந்திரன்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக இவர் இருக்கும்போது ‘மாஸ்டர்’ மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் அப்படங்களில் 2 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

actor Mahendran next movie kamalhaasan song lyrics title

ஒன்று படத்தில் தானும் ஒரு கதாபாத்திரமாகவே தோன்றியிருப்பார். சில திரைப்படங்களில் கதாநாயகனின் சிறுவயது கேரக்டராக நடித்து அசத்தியிருப்பார். பாளையத்து அம்மன் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக்குடனான ஒரு காட்சியில் முருகக் கடவுளாக தோன்றியும் சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார்.

‘மாஸ்டர்’ படத்தில் மகேந்திரன்

இப்படி, 90S Kids-க்கு பரீச்சயமான நடிகர் மகேந்திரன் அண்மையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து உண்மையில் ‘மாஸ்டர்’ மகேந்திரன் எனும் பெயருக்கு நியாயம் சேர்த்தார்.

actor Mahendran next movie kamalhaasan song lyrics title

இந்நிலையில் மகேந்திரனின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிப்பப்பரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

அதன்படி, நடிகர் மகேந்திரன் நடிக்கவிருக்கும் ‘ரிப்பப்பரி’ எனும் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

actor Mahendran next movie kamalhaasan song lyrics title

நா.அருண் கார்த்திக் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தினை ஏ.கே இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ரிப்பப்பரி.. ரிப்பப்பரி..

actor Mahendran next movie kamalhaasan song lyrics title

பத்மஸ்ரீ நடிகர் கமல்ஹாசன் 3 கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி, மாபெரும் ஹிட் படமாக அமைந்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம் பெறும்,  ‘புதுமாப்பிள்ளைக்கு’ பாடலில் இடம் பெறும் பிரபலமான சிக்னேச்சர் வரிதான் ‘ரிப்பப்பரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

actor Mahendran next movie kamalhaasan movie song lyrics title

People looking for online information on Actor Mahendran, Ripupbury, Ripupburyfirstlook will find this news story useful.