www.garudabazaar.com

வருது.. வருது.. 24 மணி நேரமும் ஓடும் Biggboss OTT எப்படி இருக்கும்?.. கமல்ஹாசன் பேசும் புதிய ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி முடிவடைந்தது.  இதில் ராஜூ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

Bigg Boss Ultimate OTT detais kamalhaasan new promo viral

பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே

பிக்பாஸ் கோப்பையை ராஜூ கைப்பற்றியதை அடுத்து அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல விஜய் டிவி விஜே பிரியங்கா ரன்னர் அப்-ஆக இடம் பெற்றார். இருவரின் வெற்றியையும் கமல்ஹாசன் இறுதியில் அறிவித்தார்.

105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ்

105 நாட்கள் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் 18 பேர் முதல் நாள் கலந்துகொண்டனர். இவர்களுள் வாரம் ஒருவர் என ஒவ்வொருவராக எலிமினேட் ஆகினர். கடைசி நாளான ஃபினாலேவில் நிரூப், பாவனி மற்றும் அமீர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதன் பிறகு ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர்.

Also Read: அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!

இறுதி 2 போட்டியாளர்கள்

இவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சந்தித்த கமல்ஹாசன் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அழைத்து வந்து கொஞ்ச நேரம் விளையாட்டுகள் காண்பித்து, ராஜூவின் வெற்றியை அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக, நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.

BiggBoss OTT பற்றிய அறிவிப்பு

இந்த அறிவிப்பை அடுத்து, டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள BiggBoss OTT நிகழ்ச்சி பற்றிய அறிவிபையும் வழங்கிய கமல், அதிலும் தானே பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதன்படி இந்த நிகழ்ச்சி, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சீசன் போட்டியாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

24 மணி நேரமும் ஓடும் BiggBoss Ultimate

இந்த அறிவிப்பையும் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னிலையில் வழங்கிய கமல்ஹாசன், இந்நிகழ்ச்சிக்கு BiggBoss Ultimate என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: BiggBoss நினைவா ராஜூ எடுத்துட்டு போகும் பொருள் இதுதான்!.. ஃபீல் பண்ணி அவரே சொன்ன காரணம்!

புதிய ப்ரோமோ

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த ப்ரோமோவில்  BiggBoss Ultimate-க்கான செட் தயாராவது போல காட்டப்பட்டுள்ளது. இதில், “விட்டத பிடிக்க வீட்டுக்கு வரப்போறாங்க. விடாம மல்லுக்கட்ட போறாங்க. உங்களுக்கு தானே வேலை ஜாஸ்தி பிக்பாஸ்.. நீங்க சுடுதண்ணில உப்பு போட்டு.....உங்களுக்கு தெரியாததா.. (குரலை பாதுகாக்க அட்வைஸ் செய்கிறார்)...

தொலைச்ச இடத்துல தான தேட முடியும்.. தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..  This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம உங்களுக்கு பிடிச்ச போட்டியாளர்கள் புது வேகத்துடனும் புதுப்புது வியூகத்துடனும் வர்றாங்கா. 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில்” என்று குறிப்பிடுகிறார்.

Also Read: "இந்த வேல தான் பாத்துட்டு இருந்தேன்! எத்தனையோ STARS-க்கு" .. அழுதுகொண்டே ராஜூ ரிவீல் செய்த உண்மை!

Bigg Boss Ultimate OTT detais kamalhaasan new promo viral

People looking for online information on Bigg Boss Tamil 5, Bigg Boss Ultimate promo, BiggBossTamil5, BiggBossUltimate, KAMALHAASAN, Kamalhaasan vijay tv will find this news story useful.