www.garudabazaar.com

"விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் மயில்சாமி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Super Star Rajinikanth Condolences to actor Mayilsamy demise

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமணத்துக்கு தயங்கியபடி அழைத்த படவா கோபி .. ஆனா மயில்சாமி வந்து செஞ்ச நெகிழ்ச்சி விஷயம்...

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

Super Star Rajinikanth Condolences to actor Mayilsamy demise

Images are subject to © copyright to their respective owners.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் . மயில்சாமி உடல் அவருடைய சாலிகிராமம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Super Star Rajinikanth Condolences to actor Mayilsamy demise

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மயில்சாமி உடலுக்கு மலர் மாலை அணிவித்து கைக்கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் பத்திரிகையாளிடம்  பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு, திரை துறைக்கு மட்டுமல்ல சமூகத்துக்கு பேரிழப்பு" என இரங்கல் கூறியுள்ளார்.

Also Read | "மகா சிவராத்திரி".. ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. பரவச நடனம் ஆடிய நடிகை.. வீடியோ!!

"விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Condolences to actor Mayilsamy demise

People looking for online information on Mayilsamy, Mayilsamy demise, Rajinikanth, Rajinikanth Condolences Mayilsamy demise will find this news story useful.