www.garudabazaar.com

"3 முறை போன் பண்ணார். எடுக்க முடியல..." மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து ரஜினி உருக்கமான பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் மயில்சாமி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்துள்ளார்.

Super Star Rajinikanth about Actor Mayilsamy Last Wish

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அண்ணாமலையாரின் பெருங்கருணை".. மஹாசிவராத்திரியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி போஸ்ட்..!

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

Super Star Rajinikanth about Actor Mayilsamy Last Wish

Images are subject to © copyright to their respective owners.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் .  நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "மயில்சாமி என்னுடைய நெருங்கிய நண்பர். இருந்தாலும் நாங்கள் இணைந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. நாங்கள் அடிக்கடி சந்திப்போம். அவர் இரண்டு விஷயங்கள் குறித்து மட்டுமே பேசுவார். ஒன்று எம். ஜி. ஆர் , மற்றொன்று சிவன். மயில்சாமியின் கடைசி ஆசையான கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் சிவன் கோயிலில் நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என அவர் ஆசைப்பட்டார் என கேள்விப்பட்டேன். அவருடைய கடைசி ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன். சிவமணியிடம் பேசுவேன்". என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

Super Star Rajinikanth about Actor Mayilsamy Last Wish

Images are subject to © copyright to their respective owners.

 முன்னதாக, " தனக்கு ஒரு ஆசை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை  மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வர வேண்டும்.  சிவலிங்கத்திற்கு ரஜினிகாந்த் கைகளால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும்" என மயில்சாமி தன்னிடம் கூறியதாக சிவமணி பேட்டியில் பகிர்ந்துள்ளார்

Also Read | "விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம்

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth about Actor Mayilsamy Last Wish

People looking for online information on Mayilsamy, Mayilsamy Last Wish, Rajinikanth will find this news story useful.