LIGER D Logo Top
www.garudabazaar.com

நானி நடிக்கும் புதிய PAN INDIA படம்.. சில்க் ஸ்மிதா போட்டோவுடன் வெளிவந்த ரிலீஸ் தேதி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி & கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

Nani Keerthy Suresh Dasara Movie Release Date Announced

Also Read | மோகன் ஜி இயக்கும் பகாசூரன்.. ருத்திராட்சம் அணிந்து செல்வராகவனின் மிரட்டலான FIRST LOOK POSTER!

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம்   மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது.

Nani Keerthy Suresh Dasara Movie Release Date Announced

சமீபத்தில் வெளியான ‘தசரா’  படத்தின் ‘ஸ்பார்க் ஆஃப் தசரா’ முன்னோட்டம் & லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய  போஸ்டரில் சில்க் ஸ்மிதா போட்டோ பின்னணியில் நானி அமர்ந்திருக்கும் தோரணையில் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம், வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம்‌ 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Nani Keerthy Suresh Dasara Movie Release Date Announced

நடிகர் நானி மாஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், ஒரு அழுத்தமான  டிராமா திரைப்படமாக உருவாகிறது.

கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.

Nani Keerthy Suresh Dasara Movie Release Date Announced

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Also Read | 'கோப்ரா' படத்தின் டிரெய்லரை பாராட்டிய சுரேஷ் ரெய்னா.. உற்சாகமான இர்பான் பதான்! வைரல் ட்வீட்

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Dasara Movie Release Date Announced

People looking for online information on Dasara, Dasara Movie, Dasara Movie Release Update, Keerthy Suresh, Nani will find this news story useful.