Kaateri logo top
www.garudabazaar.com

சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. ஹீரோயின் சித்தி இத்னானி கொடுத்த புது அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை நடிகை சித்தி இத்னானி வெளியிட்டுள்ளார்.

Venthu Thaninthathu Kaadu Movie Update from Siddhi Idnani

Also Read | ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

Venthu Thaninthathu Kaadu Movie Update from Siddhi Idnani

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Update from Siddhi Idnani

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக ஏற்கனவே சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Venthu Thaninthathu Kaadu Movie Update from Siddhi Idnani

இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் கௌதம் மேனன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கௌதம் மேனனுக்கு சொந்த குரலில் டப்பிங் பேச வைத்ததற்கு நன்றி கூறியுள்ளார்.

 

Also Read | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Update from Siddhi Idnani

People looking for online information on Gautham Vasudev Menon, Siddhi Idnani, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu Movie, Venthu Thaninthathu Kaadu Movie Update will find this news story useful.