Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

நானி, கீர்த்தி நடிக்கும் PAN INDIA படம்.. வெளிவந்த அடுத்த மாஸ் போஸ்டர்! நானி லுக் சும்மா அள்ளுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான  படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Nani Keerthy Suresh Dasara Movie New Gang Poster

அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

Nani Keerthy Suresh Dasara Movie New Gang Poster

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம்   மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Nani Keerthy Suresh Dasara Movie New Gang Poster

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது.

RRR படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்து, தேசத்தையே வியப்பில் ஆழ்த்திய பிரேம் ரக்‌ஷித் மாஸ்டர் இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அதிகமான வெயில் கொளுத்தும் சூழல் இருந்தபோதிலும், இப்பாடலுக்காக படக்குழு கடினமாக உழைத்துள்ளது. இப்பாடல் படப்பிடிப்பில் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பிரம்மாண்டமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான ‘தசரா’  படத்தின் ‘ஸ்பார்க் ஆஃப் தசரா’ முன்னோட்டம் & லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் அடுத்த புதிய லுக் போஸ்டர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. நானி தனது நண்பர்களுடன் இருக்கும் இந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nani Keerthy Suresh Dasara Movie New Gang Poster

நடிகர் நானி மாஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், ஒரு அழுத்தமான  டிராமா திரைப்படமாக உருவாகிறது.

கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Dasara Movie New Gang Poster

People looking for online information on Dasara, Dhashara, Keerthy Suresh, Nani will find this news story useful.