Rocketry
www.garudabazaar.com

OTT-யில் வெளியாகும் நானி - நஸ்ரியா நடித்த சூப்பர் ஹிட்டான 'அடடே சுந்தரா' திரைப்படம்.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி & நடிகை நஸ்ரியா நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nani Nazriya Ante Sundaraniki OTT Release on Netflix

Also Read | ஒரே ஒரு Bday.. ஓவர் நைட்டில் பாப்புலர்.. fans meet-ல் ஹெல்மெட்டை இழந்த TTF வாசன் .. உருக்கமான வீடியோ

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்க, நேச்சுரல் ஸ்டார் நானியின் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் உருவானது.

விவேக் சாகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது.

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றது.

Nani Nazriya Ante Sundaraniki OTT Release on Netflix

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார்.  இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.

Nani Nazriya Ante Sundaraniki OTT Release on Netflix

லீலா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா கிறித்தவ பெண்ணாக நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாகி 4 வாரங்களை தொட உள்ள நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nani Nazriya Ante Sundaraniki OTT Release on Netflix

அதன்படி இந்த படம் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஆஹா.. நயன் & விக்கி தம்பதி.. Latest ஃபோட்டோ.. சுத்திப் போட்டுக்கும் ரசிகர்கள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Nani Nazriya Ante Sundaraniki OTT Release on Netflix

People looking for online information on Ante Sundaraniki Movie, Ante Sundaraniki OTT Release, Nani, Nazriya will find this news story useful.