IRAVIN NIZHAL
www.garudabazaar.com

பிரபல OTT-யில் மாஸ் காட்டும் நானி - நஸ்ரியா நடித்த 'அடடே சுந்தரா'.. தெறி சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி & நடிகை நஸ்ரியா நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' படம் ஓடிடியில் மாஸ் சாதனை படைத்து வருகிறது.

Nani Nazriya Ante Sundaraniki OTT Netflix Trending Number One

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தெலுங்கு ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

'புஷ்பா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றது. வெளிநாடுகளில் இப்படம் மெகா ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார்.

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டது.

Nani Nazriya Ante Sundaraniki OTT Netflix Trending Number One

இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராக பணியாற்றினர்.விவேக் சாகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில்  இந்த படம் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

Nani Nazriya Ante Sundaraniki OTT Netflix Trending Number One

மேலும் திரையரங்குகளை விட ஒடிடியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு நிலவுகிறது. படம் பார்த்து விட்டு பல ரசிகர்கள் படத்தினை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். படத்தில் பேசிய கருத்துக்களை பதிவிட்டும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் முதல் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

Nani Nazriya Ante Sundaraniki OTT Netflix Trending Number One

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.

லீலா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா கிறித்தவ பெண்ணாக நடித்துள்ளார்.

Also Read | அனிருத் இசையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அடுத்த சிங்கிள்.. ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Nani Nazriya Ante Sundaraniki OTT Netflix Trending Number One

People looking for online information on Ante Sundaraniki, Ante Sundaraniki Netflix Trending Number One, Nani, Nazriya, OTT will find this news story useful.