Veetla Vishesham Others Page USA

பிரியாணிக்கு பதில் சாம்பார் சாதம்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த BTS போட்டோ! மாமன்னன் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து BTS போட்டோவை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

Keerthy Suresh Shared Mamannan Movie Sambar Rice BTS Image

Also Read | நடிகை மர்லின் மன்றோவின் Bio Pic.. Ana de Armas நடிப்பில் வெளியான அசரவைக்கும் டீசர்! பட ரிலீஸ் எப்போ?

சில நாட்களுக்கு முன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.  மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன், கோப்ரா, இரவின் நிழல், அயலான், மலையன்குஞ்சு, பத்து தல, வெந்து தணிந்தது காடு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. குருவி, மன்மதன் அன்பு, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

Keerthy Suresh Shared Mamannan Movie Sambar Rice BTS Image

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

Keerthy Suresh Shared Mamannan Movie Sambar Rice BTS Image

மாமன்னன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் மே மாதம் முதல் வாரம் துவங்கியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் மாமன்னன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

Keerthy Suresh Shared Mamannan Movie Sambar Rice BTS Image

படப்பிடிப்பின் உணவு இடைவேளையின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தட்டில் சாம்பார் சாதமும் தொக்கும் உள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து "ஒருவர் வேலை செய்யும் இடத்தில் பிரியாணி பற்றி பேசினால், அடுத்தது இதுதான்" என கூறி உதயநிதி ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

Also Read | ரஜினி - நெல்சன் இணையும் புதிய படம்.. மிரட்டலான டைட்டிலுடன் வெளியான மாஸ் போஸ்டர்! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Shared Mamannan Movie Sambar Rice BTS Image

People looking for online information on Keerthy Suresh, Mamannan Movie, Udhayanidhi Stalin will find this news story useful.