LIGER D Logo Top
www.garudabazaar.com

மோகன் ஜி இயக்கும் பகாசூரன்.. ருத்திராட்சம் அணிந்து செல்வராகவனின் மிரட்டலான FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் பகாசூரன் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Selvaraghavan Bakasuran Movie First Look Poster Released

Also Read | Breaking: "டைட்டிலே செமயா இருக்கே?".. சந்தானத்தின் அடுத்த படம் இதுவா? யாரு டைரக்டர்?

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G.

மோகன் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் பகாசூரன் படத்தை இயக்குகிறார். இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Selvaraghavan Bakasuran Movie First Look Poster Released

இந்த படத்தின் பூஜை சிலநாட்களுக்கு முன் சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது.  இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பகாசூரன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கனின் கதாபாத்திரமாகும். இந்நிலையில் மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி இணைந்து நடித்து வரும் பகாசூரன் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ருத்திராட்சம் அணிந்து திருநீறு பூசி செல்வராகவன் தோற்றம் அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீஸர் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:10 மணிக்கு வெளியாகும் என்றும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Selvaraghavan Bakasuran Movie First Look Poster Released

தமிழின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.  அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் நடிகராக பிஸியாக இருந்தாலும்  தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்வடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. இர்ஃபான் பதான் பகிர்ந்த வைரல் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan Bakasuran Movie First Look Poster Released

People looking for online information on Bakasuran, Bakasuran movie, Bakasuran Movie First Look Poster, Selvaraghavan will find this news story useful.