www.garudabazaar.com

நாக சைதன்யா & வெங்கட் பிரபுவின் NC22.. பிரம்மாண்ட ஆக்சன் படப்பிடிப்பு! இந்த ஊர்லயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும்  NC 22 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya Venkat Prabhu NC22 Movie Shooting Update

Also Read | குட்டிக்கதை கேட்க ரெடியா? 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே?

வெங்கட்பிரபு இயக்கத்தில்  நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்  தொடங்கியது. தற்காலிகமாக  NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில்  NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Naga Chaitanya Venkat Prabhu NC22 Movie Shooting Update

இந்த படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ளனர்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசையில் மேதமை கொண்ட தந்தை மகனுமான ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார்.

Naga Chaitanya Venkat Prabhu NC22 Movie Shooting Update

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐத்ராபாத் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், சம்பத், கீர்த்தி ஷெட்டி & நாக சைதன்யா நடிக்கும் காட்சிகள் இந்த ஷெட்யூலில் படமாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் மேத்யூ இந்த சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளார்.

இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | அட.. விஷ்ணு விஷால் & நம்ம பூங்குழலி ஐஸ்வர்யா லெஷ்மி நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ .. ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Naga Chaitanya Venkat Prabhu NC22 Movie Shooting Update

People looking for online information on Naga chaitanya, NC22 Movie, NC22 Movie Shooting Update, Venkat Prabhu will find this news story useful.