www.garudabazaar.com

அட.. விஷ்ணு விஷால் & நம்ம பூங்குழலி ஐஸ்வர்யா லெஷ்மி நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ .. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi Movie Release Date

Also Read | PS1: பொன்னியின் செல்வன் பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு.. மனதார நன்றி சொன்ன நடிகை ராதா!

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌

இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்,  “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi Movie Release Date

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் & முதல் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi Movie Release Date

இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொள்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைத்து உள்ளனர்.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் போஸ்டரில் ஐஸ்வர்யா லெஷ்மி கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்து உள்ளார். அவர் அருகே விஷ்ணு விஷால் நிற்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது.

Also Read | கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’.. விஷ்ணு விஷாலுக்கு வெச்சிருந்த டைட்டிலா? - பிரபல இயக்குநர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi Movie Release Date

People looking for online information on Aishwarya Lekshmi, Gatta Kusthi, Gatta Kusthi Movie Release Update, Vishnu Vishal will find this news story useful.