www.garudabazaar.com
iTechUS

“வார இறுதியில் வறுத்தெடுக்குறாங்க.. சரியா இருக்குறதா நெனைக்குறீங்களா?” - அசிமிடம் பிரியங்கா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

Also Read | “தம்பி இல்ல.. அண்ணன்னு ஐஸ்வர்யா ராஜேஷ் டென்சன் ஆவாங்க”.. டிடி சொன்ன சுவாரஸ்யம்! bigg boss

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதேபோல் பொங்கல் விழாவை முன்னிட்டு பல சிறப்பு விருந்தினர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர்.

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த், பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தனர். இதில் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இரண்டாவது இடமும் பிடித்திருந்தவர்.

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

அவர்களும் போட்டியாளர்கள் இடையே கலகலப்பாக நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். அப்போது அங்கே உள்ள போட்டியாளர்கள் அனைவரை பற்றியும் நிறைய கருத்துக்களை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அப்படி ஒரு சூழலில், அசிம் பற்றியும் சில கருத்துக்களை பிரியங்கா தெரிவித்திருந்தார். முன்னதாக அசிமிடம் பேசிய பிரியங்கா, “என்ன நடந்தாலும் அதை நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தை கத்துக்கணும், வெளியில் போய் இங்கு நடந்ததற்கான விளைவுகளை சந்திக்கணும். ஆனாலும் வார இறுதியில் வறுத்தெடுத்தாலும், வீட்டுக்குள் சொரணையே வராதபடி இருக்கீங்களே?  சரியாதான் பண்றதா நீங்க நினைக்கிறீங்களா?” என கேட்டார்.

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

இதற்கு பதில் அளித்த அசிம், “கோவப்படுவது என் மீது பெரிதாக இருந்தது. அது அறியால் நடப்பது. நான் தப்புனு தேரிஞ்சா மன்னிப்பு கேட்ருவேன், நான் தெரிஞ்சே தப்பு பண்ணு தானே..” என கேட்டார். அதற்கு பிரியங்கா, “நீங்க மத்தவங்களை தாழ்த்துறீங்களா?” என கேட்க, அதற்கும் பதில் அளித்த அசிம்,  “இல்லை. ஒப்பிடும்போது அப்படி தோன்றலாம், ஆனால் உண்மையில் அப்படி இல்லை.” என பதில் அளித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே பிரியங்கா அசிமிடம் தனியே நின்று இத்தனை கேள்விகள் கேட்ட விசயம் சென்சேசனல் ஆகியுள்ளது.

Also Read | வந்தவங்களால ஹவுஸ்மேட்ஸ் குழம்பிட்டாங்க.. “நீங்க வந்ததும்”.. டிடிக்கு நன்றி சொன்ன பிக்பாஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Questions to Azeem bigg boss 6 tamil பிக்பாஸ்

People looking for online information on Azeem, Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Priyanka will find this news story useful.