“பிரச்சனை முடிஞ்சு கேமராவுக்காக வர்ற.. நீ என்ன நியாயவாதி”.. விக்ரமனை விமர்சித்த GP முத்து
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்கள் வந்து போகின்றனர். இந்நிலையில் எலிமினேட் ஆகி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் மகேஸ்வரி, மணிகண்டா, மைனா நந்தினி, தனலட்சுமி, அசல் கோலார் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் அமர்ந்து விக்ரமனை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ஜிபி முத்து, "முதல் வாரத்தில் தனாவுக்கும் ஆயிஷாவுக்கும் சண்டை நடந்துட்டு இருந்தது. அப்போ விக்ரமன் ஒதுங்கி நின்னு பார்த்துக்ட்டே இருக்காரு. அப்ப அசிம் வந்து விலக்கி விட்டு சண்டை முடிஞ்சு போச்சு. இத பார்த்துட்டு இருந்த விக்ரம், 15 நிமிஷம் கழிச்சு வந்து இங்க வாம்மா, சொல்லுங்க என்ன பிரச்சனைன்னு கேக்குறாரு. ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு வந்து பேசணும்" என கேட்கிறார்.
இதற்கடுத்து மணி, மைனா நந்தினி, தனலட்சுமி ஆகியோரும் அசிம் பற்றிய பிரச்சனைகள் வந்த போது கூட, பிக்பாஸ் கூறிய பிறகுதான் நியாயம் கேட்க விக்ரமன் வந்தார் என்றும் அதற்கு முன்பு வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதன்பினர் பேசும் ஜிபி முத்து, "அவருக்கு என்னன்னா.. நீங்க எல்லாரும் பேசி முடிச்சிடுங்க, அதுக்கப்புறம் நான் பேசினால்தான் என் மூஞ்சி கேமராவில் தெரியும்ன்னு Content-காக வர்றாரு. அதான் அவர் மேல கோவம் வருது எனக்கு. அப்ப என்னய்யா நீ நியாயவாதி. தூ" என ஜிபி முத்து தெரிவித்துவிட்டு அப்படியே அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.