www.garudabazaar.com
iTechUS

Run baby Run : “Highways-ல கார் ஓட்டுற Scene.. எதிர்ல லாரி வந்துடுச்சு”.. “அப்போ டைரக்டர் சொன்னது..” - RJ பாலாஜி Fun Speech

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

RJ Balaji Aishwarya Rajesh starring Run baby Run BTS

Also Read | Aparna Balamurali : நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய ரசிகர்.. மேடையில் மன்னிப்பு.!

இப்பட விழாவில் பேசிய, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள். அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும் விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்து விட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் வசனம் உறுதியாக இருந்தது. முதல்முறையாக ஆர்.ஜே.பாலாஜியுடன் எனக்கு முதல் படம். எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக்குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் பேசும்போது, “நான் மலையாளத்தில் தான் நிறைய படங்கள் இயக்கியிருக்கிறேன். வெங்கடேஷ் சார் மூலம் தான் லக்ஷ்மண் சாரின் அறிமுகம் கிடைத்தது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்போது புது அனுபவமாக இருந்தது. கதை கூறும்போது, லக்ஷ்மண் சார் தான் ஆர்.ஜே.பாலாஜியை கூறினார். இப்படம் முழுக்க சீரியஸாகத்தான் போகும் என்று கதை கூறியதும் ஒப்புக் கொண்டார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். ஐஸ்வர்யா மேடம் கூறியது சரிதான். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் படம் வெளியானதும் தெரியும். நான் முதலில் இங்கு வரும்போது மலையாளத்தில் ஒரு மாதிரி இருக்கும், இங்கு வேறு மாதிரி இருக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

RJ Balaji Aishwarya Rajesh starring Run baby Run BTS

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும் இதை செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதனால் நான் தயாரிப்பாளர் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது போல் தான் கிருஷ்ணகுமார் சார் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார். இந்த படத்தில் 33வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.

RJ Balaji Aishwarya Rajesh starring Run baby Run BTS

அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். அவர் திறமையான குழுவை வைத்திருக்கிறார். நான் பொறாமைப்படும் அளவிற்கு அந்த குழுவை வைத்திருக்கிறார். லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.

இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

RJ Balaji Aishwarya Rajesh starring Run baby Run BTS

ஐசரி கணேஷ் சார் எப்படி என் குடும்பத்தில் ஒருவரோ அப்படித்தான் லக்ஷ்மன் சாரும். கார்த்தி சார் போல, தற்போது எனக்காகவும் லக்ஷ்மன் சார் கதை கேட்க ஆரம்பித்து விட்டாராம். படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்” என்றார்.

Also Read | நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட டைட்டில் இதுவா?! .. பூஜையுடன் வெளியான புகைப்படங்கள்..

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Aishwarya Rajesh starring Run baby Run BTS

People looking for online information on Aishwarya Rajesh, RJ Balaji will find this news story useful.