www.garudabazaar.com
iTechUS

"GP முத்து சொன்னாரு.. குறும்படம் பாக்குறீங்களா?".. அசிம் - ஷிவின் இடையே வலுத்த வாக்குவாதம்!.. bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

shivin azeem argument gp muthu kurumpadam bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்கள் வந்து போகின்றனர். இந்நிலையில் எலிமினேட் ஆகி மீண்டும் மகேஸ்வரி, மணிகண்டா, மைனா நந்தினி, தனலட்சுமி, அசல் கோலார் மற்றும் ஜிபி முத்து ஆகிய போட்டியாளர்கள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே, அசிம் தற்போது டாஸ்க்கை மீறி, யாருக்கும் தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டதாக போட்டியாளர்கள் குறிப்பிட்டனர். அதாவது பாத்ரூமில் அசிமுடைய Foundation இருந்ததாக தெரிய, அதனை அவர்தான் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தி இருப்பார் என்றும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் தெரிவிக்கின்றனர். இதற்கு நடுவே ராபர்ட் மாஸ்டர் அசிமை மேக்கப் போட்டதாக குறிப்பிட, அவரிடம் ரச்சிதா பெயரை பயன்படுத்தி ஆவேசம் அடையவும் செய்கிறார் அசிம். தேவை இல்லாமல் ரச்சிதா பெயரை பயன்படுத்தியதால் அசிம் மீது ராபர்ட் மாஸ்டரும் கோபம் அடைகிறார். இப்படியாக இந்த விவாதம் போக, பெரிய அளவில் சலசலப்பையும் அங்கே உண்டு பண்ணி இருந்தது.

இந்நிலையில் ஜிபி முத்து சொன்னதை பற்றி விக்ரமனுடன் சேர்ந்து சென்று அசிமிடம் ஷிவின் கேட்க, அதற்கு அசிமோ, “ஜிபி முத்து அவ்வாறு சொல்லவே இல்லை, அவர் சொல்லாமல் நீங்களாக ஏன் சொல்றீங்க?” என கேட்டு வாக்குவாதம் செய்ய, ஷிவினோ, “ஜிபி முத்து சொன்னாரு.. குறும்படம் பாக்குறீங்களா?” என உரக்க சொல்கிறார்.  இதனிடையே Sacrifice டாஸ்க் தொடர விருப்பம் இருந்தால் தொடரலாம் என்றும் இல்லை என்றால் பாதியிலேயே விட்டுவிட்டு விடலாம் என்றும் பிக் பாஸ் சொன்னது குறிப்பிடத்தக்கது.

shivin azeem argument gp muthu kurumpadam bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.