www.garudabazaar.com
iTechUS

"அவங்க இல்லாதது ஃபீலிங்கா இருக்கு".. "அவரே ஃபீல் பண்ணல".. GP முத்துவிடம் ஷிவின் அடித்த கமெண்ட்..! 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu says he misses Rachitha in Bigg Boss 6

Also Read | "அறம் வெல்லும்".. ஏன் சம்மந்தமே இல்லாம இங்க பேசுறீங்க?.. தனா முன்வைத்த கேள்வி.. விக்ரமன் பதில்ஸ்!!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.  முன்னதாக வீட்டுக்குள் முதல் நாள் வந்தபோதே, ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார்.

இந்நிலையில் ரச்சிதாவை மிஸ் பண்ணுவதாக ஜிபி முத்து சொல்ல, அதற்கு ஷிவின், “நீங்க ஏன் ஃபீல் பண்ண்றீங்க.. ஃபீல் பண்ணவேண்டிய ஆளே ஃபீல் பண்ணல” என கூற, அதற்கு தலைவர் ஜிபி முத்து, “அவரு ஃபீல் வேற.. என் ஃபீல் வேற” என கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவுக்கும் ரச்சிதாவுக்கும் மரியாதையான நல்லுறவு இருந்தது. ஒருமுறை உடல்நிலை சரியில்லை என கூறப்பட்டது.  அப்போது ஊசி போட்டீங்களா என ஜிபி முத்துவை ரச்சிதா கேட்டார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜிபி முத்துவை ரெஸ்ட் எடுக்க சொன்ன ரச்சிதா, ‘எதுவா இருந்தாலும், கூப்பிடுங்கள்.. நீங்கள் எதுக்காகவாச்சும் எழுந்து வந்தீர்களேயானால் அடி விழும்!’ என உரிமையாக எச்சரித்தார்.

Also Read | விஜய் நடித்த 'வாரிசு'.. சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல TV நிறுவனம்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu says he misses Rachitha in Bigg Boss 6

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, GP MUTHU, Rachitha, Vijay tv will find this news story useful.