"கஷ்டமா இருக்கு..".. வருந்திய விக்ரமன்.. “கோள்மூட்டாத வரைக்கும் நல்லவங்க தான்” - தேற்றிய ஏடிகே.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.
இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸாக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, விக்ரமன் சற்று சோர்ந்து போய் அமர்ந்ததாகவும் தெரிகிறது. முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் கொட்டாவி விட்டது பெரிய அளவில் டிரெண்டிங்கான விஷயமாக மாறி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் சற்று சோர்ந்து போயிருக்கும் நிலையில் அவரிடம் பேசும் ADK, "கதிரவன் ஒன்னு சொன்னாரு இந்த வீட்ல எது செஞ்சாலும் தப்பு, எது செஞ்சாலும் சரி. அந்த மாதிரியான ஒரு வீடு இது.
அதனால அதை மைண்ட்ல எடுத்துக்காதீங்க. முதல்லயே பார்த்தேன், நீங்க இப்படி ஓரமா வந்து உக்காந்துட்டீங்க. அடுத்தவங்களோட வாழ்க்கையை கெடுக்காத வரைக்கும், அடுத்தவங்க சொன்னதை கோள்மூட்டி விடாத வரைக்கும், அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்காத வரைக்கும் நம்ம எல்லாரும் நல்லவங்க தான். நீங்க இங்க வந்ததுக்கு உங்க கேரக்டர் Establish பண்ணி இருக்கீங்க. நீங்க கரெக்டா தான் இருந்துருக்கீங்க" என விக்ரமனை ADK தேற்றவும் செய்கிறார்.
மேலும் அந்த விஷயம் உங்கள் மனதை புண்படுத்தி விட்டதா என ADK கேட்க, அதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "ஆமா கொட்டாவி விட்டது ட்ரெண்ட் ஆகுது அப்படிங்குறப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. ஆரம்ப காலத்தில் எனக்கு இந்த இடம் புதுசு. இன்னொண்ணு வந்த உடனே காய்ச்சல். உடம்பு முடியாம ஆகி செட்டில் ஆகுறதுக்கே இரண்டு வாரம் ஆயிடுச்சு. சில நேரங்கள்ல வேகமா கூட என்னால நடக்க முடியாது. நடப்பேன், ஆனா மூச்சு வாங்கும். டாக்டரே சொல்லி இருக்காங்க. அது இப்படி போகுது அப்படிங்குற போது கஷ்டமா இருக்கு" என விக்ரமன் கூறுகிறார்.