www.garudabazaar.com
iTechUS

“தம்பி இல்ல.. அண்ணன்னு ஐஸ்வர்யா ராஜேஷ் டென்சன் ஆவாங்க”.. டிடி சொன்ன சுவாரஸ்யம்! bigg boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

Also Read | பிக் பாஸ் வீட்டில்.. விக்ரமன்-ஐ தொடர்ந்து.. "தமிழ்நாடு" என்ற வார்த்தையை சொன்ன அசிம்!!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

தற்போது இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் டிவி டிடி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தம்முடைய பார்வையை பகிர்ந்து கொண்டார். அப்போது போட்டியாளர் மணிகண்டா ராஜேஷ் பற்றி பேசிய டிடி, “ஐஸ்வர்யா ராஜேஷ் பலருக்கு தெரியும்.

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

ஆனால் அவருடைய பின்னணியில் இருந்து ஒருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பது பலகாலம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. உண்மையில் பெரிய விஷயம். உங்கள் தம்பி உறுதுணையாக இருக்கிறார் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறும் பொழுதெல்லாம் டென்ஷன் ஆவார், அவர் தம்பி இல்ல அண்ணன் என டென்சனாவார்" என்று விளையாட்டாக கூறினார்.

மணிகண்டா ராஜேஷ்m பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பதும், பிரபல சீரியல் நடிகையின் சோஃபியாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | விக்ரமனிடம் சீரியஸா பேசிய அமுது.. சைலண்டா மகேஷ்வரி சொன்ன கமெண்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

DD talsk about Manikanda and aiswarya rajesh bigg boss 6

People looking for online information on Aiswarya Rajesh, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Dhivya Dharshini, Manikanda Rajesh will find this news story useful.