ஜீவாவின் ஜிப்ஸி - ஸ்பெஷல் ஷோ பார்த்த ஸ்டாலின். 'படம் பார்த்துவிட்டு...' ராஜு முருகன் Opens.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவாவின் ஜிப்ஸி படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் குறித்து இயக்குநரிடம் பேசியுள்ளார்.

ஜிப்ஸி படம் குறித்து ஸ்டாலின் கருத்து | mk stalin over jiiva raju murugan's gypsy movie

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ஸியாக சுற்றித் திரியும் கிட்டார் இசை கலைஞனாக ஜீவா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜிப்ஸி படத்தை கடந்த 2-ஆம் தேதியன்று சிறப்பு காட்சியாக திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து படம் பார்த்து முடித்த அவர் 'படம் நன்றாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் சரியான படம்' என்றும் பாராட்டியதாக இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார். காதலையும் அன்பையும் பின்புலமாக கொண்டு, பல்வேறு தற்கால அரசியல் பிரச்சனைகளை ஜிப்ஸி பேசியிருப்பது, அதன் ட்ரெய்லர் மட்டும் ஸ்னீக் பீக் காட்சிகளில் தெரிவது குறிப்பிடத்தக்கது

Entertainment sub editor