ஒரே டைரக்டர்ல தொடங்கி, இப்போ ஒரே டைம்ல டாடி ஆகப் போறோம் - சஞ்சீவ் சொல்லும் அந்த ஹீரோ யார்.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, அழகான விஷயமொன்றை பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சீவ். இவர் ராஜா ராணி தொடரில் நடித்த போது, நடிகை ஆல்யா மானஸாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வந்தன. தற்போது ஆல்யா மானஸா கர்ப்பமாக உள்ளார். இத்துடன் சேர்த்து சஞ்சீவ் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாகி, அண்மையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ். இவரின் மனைவியும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இரண்டு ஜோடிகளும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு, 'ஒரே டைரக்டரிடம் ஹீரோ, இப்போ ஒரே டைம்ல டாடி ஆக போறோம், ஒரே ஹாஸ்பிட்டலில் பார்க்கிறோமே' என சஞ்சீவ் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இரண்டு ஜோடிகளுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.