மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிரம்மாண்ட Multi Starrer படம் உருவான விதம் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 14, 2019 03:26 PM
சயீரா நரசிம்ம ரெட்டி படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
![Megastar Chiranjeevi Sye Raa Narasimha Reddy Making Video Megastar Chiranjeevi Sye Raa Narasimha Reddy Making Video](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/megastar-chiranjeevi-sye-raa-narasimha-reddy-making-video-photos-pictures-stills-1.png)
மெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ராமச்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு படம் என்றாலே மாஸ் என்று அனைவருக்கும் தெரியும். அதுவும் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அந்தப் படத்தில் டான்ஸ், ஃபைட் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதால், சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் தயாரிப்பு வீடியோ இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிரம்மாண்ட MULTI STARRER படம் உருவான விதம் வீடியோ இதோ! வீடியோ