BREAKING : Bigil-ல் முக்கிய பணியை முடித்த விஜய் - வெறித்தனம் அப்டேட் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 13, 2019 04:16 PM
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவா நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தோன்றவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் தற்போது சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது வருகிறது மேலும் இன்றுடன் தளபதி விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் நிறைவு பெறுகின்றன என்று எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது . குறித்த நேரத்தில் இந்த படத்தை முடிக்க படக்குழு இரவு பகலாக வேலை செய்து வருகின்றனராம்.