'4 பெண்களை நீ யூஸ் பண்ண மாதிரி....'' - கவினிடம் பிரச்சனை பண்ணும் மது..! காண்டான லாஸ்லியா!!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 14, 2019 01:06 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோருக்கு இடையே நடந்த காதல் அத்தியாயங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக வைத்திருந்தது.

சண்டை, ஊடல் பின்பு மீண்டும் கூடல் என மொத்த கவனமும் அந்த மூன்று பேர் மேல் தான் இருந்தது. கடந்த வாரம் சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியேறினார். அதனால் பிரச்சனைகள் முடிவடைந்து சுவாரஸியம் குறைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று அபிராமியும் முகேனும் ஆஜர் ஆனார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்த வனிதாவும் கஸ்தூரியும் ஒருவருக்கொருவர் பத்தவைக்க தொடங்கினர். அதுவரைக்கு அமைதியாக சென்று கொண்டிருந்த அபிராமி - முகேனுக்கிடையேயான ஊடல் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான இரண்டாவது புரோமோவில், 4 பெண்களையும் யூஸ் பண்ணிட்டு உள்ள இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கவினை பார்த்து மதுமிதா கோவமாக செல்கிறார். அதனை கேட்ட லாஸ்லியா அது என் சம்மந்தப்பட்டது தயவு செய்து அத பேசாதீங்க என கோவமாக செல்கிறார்.
'4 பெண்களை நீ யூஸ் பண்ண மாதிரி....'' - கவினிடம் பிரச்சனை பண்ணும் மது..! காண்டான லாஸ்லியா!! வீடியோ