அதிதி ராவ் ஹிதாரியை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

Manjima Mohan joins Vijay Sethupathi's Tughlaq Durbar

அரசியல் ஃபேன்டஸி டிராமாவா உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹிதாரி நடிக்கின்றார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அச்சம் என்பது மடமையடா , தேவராட்டம் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளத்து.

தற்போது விஜய் சேதுபதி ‘சங்கத் தமிழன்’ டப்பிங் பணியில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘கடைசி விவசாயி’, முத்தையா முரளிதரனின் பயோபிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், ‘லாபம்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.