விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் மெகாஸ்டாரின் Multi Starrer படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 08, 2019 11:16 AM
பாகுபலி 2க்கு பிறகு தெலுங்கில் தயாராகி வரும் பிரமாண்ட சரித்திர படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை படம். இது உண்மையான வரலாற்று காவியம். தமிழ் நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று, ஆங்கிலேயார்களை எதிர்த்து போராடி தெலுங்கு மாவீரனின் கதை. சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். அப்பா சிரஞ்சீவி நடிக்கும் படத்தை மகன் ராம் சரண் தயாரிக்கிறார்.

சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீஷ், அனுஷ்கா ஷெட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். அமித் திரிவேதி பாடல்களுக்கு இசை அமைக்கிறார், ஜூலியஸ் பக்கிம் பின்னணி இசை அமைக்கிறார். ஆர்.ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.