ஆமீர் கான் படத்தில் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 12, 2019 12:23 PM
நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகர் ஆமீர் கானுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதியைப் பற்றி கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, நடிகர் ஷாரூக்கான், விஜய் சேதுபதியைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்.
அடுத்து ஆமீர்கானுடன் விஜய் சேதுபதி இணைந்து ஹிந்திப் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் படமான 'பாரஸ்ட் கம்ப்' என்ற படத்தை ஹிந்தியில் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அதில் தான் ஆமீர்கான், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
சமீபத்தில் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' படப்பிடிப்பிற்கு ஆமீர்கான் சென்றது குறிப்பிடத்தக்கது . ஏற்கெனவே தெலுங்கில் 'சைரா' படம் மூலம் சிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி, அடுத்து ஆமீர்கானுடன் நடிக்கப் போகும் தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.