''நான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்'' - விஜய் சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ்.

Shah Rukh Khan Praised Vijay Sethupathi For Super Deluxe

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றார்.

பின்னர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஷாருக்கான், நான் வாழ்நாளில் நான் சந்தித்த மிகச்சிறந்த நடிகர் நீங்கள் என்று விஜய் சேதுபதியை பார்த்து கூறினார். அப்போது விஜய் சேதுபதி செய்வதறியாது நன்றி தெரிவித்தார்.