சிக்கல் தீர்ந்து லேடி சூப்பர் ஸ்டாரின் ஹாரர் படம் இன்று ரிலீஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 09, 2019 09:33 PM
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தமிழகத்தில் மாலை காட்சிகள் ரிலீசானது.
![KDM delivered for Nayanthara Kolaiyuthir Kaalam Show begins KDM delivered for Nayanthara Kolaiyuthir Kaalam Show begins](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kdm-delivered-for-nayanthara-kolaiyuthir-kaalam-show-begins-photos-pictures-stills.jpg)
'பில்லா 2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டார் போலாரிஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படத்தில், நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டீமு டக்கட்டாலோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோரே கெரியாக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் தரப்பில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக இன்று(ஆக.9) காலை ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் ரிலீசாகவில்லை. பின்னர் பிரச்சனை தீர்க்கப்பட்டு தமிழ்நாடு திரையரங்குகளுக்கு KDM லைசன்ஸ் வழங்கப்பட்டதையடுத்து, இன்று மாலை காட்சிகள் வெளியானது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்திற்கு பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.