www.garudabazaar.com

திடீர் டிரெண்டான நடிகை மீரா ஜாஸ்மின்... வைரலாகும் HOT போட்டோஷூட் VIDEO & புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் புதிய போட்டோ ஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாகி உள்ளார்.

Meera Jasmine Hot New Photoshoot pics and video goes viral on social media

விக்ரமின் கோப்ரா படத்திற்கான 4 வருட உழைப்பு! BTS Image வெளியிட்டு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, ரன் மற்றும் மலையாள படங்கள் உட்பட, மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், கடந்த மாதம் முதல், முதல் முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். தேசிய விருது பெற்ற கலைஞரான இவர் முதல் முறையாக சமூக ஊடக பக்கத்தில் நுழைந்திருக்கிறார்.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்தியன் அந்திக்காடு  இயக்க, நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவாக பகிர்ந்தார். அதன் பின்னர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 2 லட்சத்து 60 ஆயிரம் பாலோவர்களை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் HOT போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு டிரெண்ட் ஆகி உள்ளார். பிரபல போட்டோகிராபர் ராகுல் ஜங்கியானி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.  ரன், சண்டகோழி படங்களில்,  நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக, நிறைய தமிழ் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும்  பல தமிழ்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது.

மாளவிகா மோகனனிடம் காதலர் தினத்தில் LOVE YOU சொன்ன ரசிகர்.. அதற்கு நடிகை கொடுத்த சூப்பர் ரிப்ளே!

திடீர் டிரெண்டான நடிகை மீரா ஜாஸ்மின்... வைரலாகும் HOT போட்டோஷூட் VIDEO & புகைப்படங்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Meera Jasmine Hot New Photoshoot pics and video goes viral on social media

People looking for online information on சண்டக்கோழி, மீரா ஜாஸ்மின், ரன், Meera Jasmine, Photoshoot pictures, Social Media will find this news story useful.