சென்னை: இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக ந்டித்து முடித்துள்ளார். விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம், தேனி பகுதியில் தொடங்கப்பட்டது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த டிசம்பர் 21ம் தேதி முடிவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் 2022 கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. பொங்கலுக்கு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து பட நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பாடத்தில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக சிம்பு படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவுக்கான பாடலை Think Music தளத்தில் வெளியிட்டுள்ளது. CSK சிங்கங்களா எனும் பாடல் சிம்பு, பூவையார் குரலில் உருவாகி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்!
இயக்குனர் கோகுல், கொரோனா குமார் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் ஸ்பின் ஆப் ஆகும். அந்த படத்தில் வந்த சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தின் நீட்சியாக கொரோனா குமார் கதாபாத்திரம் உருவாக உள்ளது.
காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரியா பவானி சங்கர் போட்ட வைரல் பதிவு
இந்நிலையில் அதிதி ஷங்கர் தற்போது பிரத்யேக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மூன்று புகைப்படங்களுடன் 'serving looks not tea' என குறிப்பிட்டு தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.