www.garudabazaar.com

விக்ரமின் கோப்ரா படத்திற்கான 4 வருட உழைப்பு! BTS Image வெளியிட்டு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் BTS Image உடன் சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது.

After 4 years vikram cobra movie shoot has wrapped

மாளவிகா மோகனனிடம் காதலர் தினத்தில் LOVE YOU சொன்ன ரசிகர்.. அதற்கு நடிகை கொடுத்த சூப்பர் ரிப்ளே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். 

இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

After 4 years vikram cobra movie shoot has wrapped

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23 முதல் துவங்கி நடைபெற்று வருவதாக அஜய் ஞானமுத்து ஏற்கனவே அறிவித்தார். பின்னர் திடிரென நடிகர் விக்ரமுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மருத்துவர் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டு கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.   கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே (ஜனவரி -5,2022) படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

After 4 years vikram cobra movie shoot has wrapped

இந்நிலையில் கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் (14.02.2022) நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கேக்வெட்டி இதனை படக்குழு கொண்டாடி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 4 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

After 4 years vikram cobra movie shoot has wrapped

After 4 years vikram cobra movie shoot has wrapped

காதலர் தினத்தில்.. அசத்தல் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளியான சர்ப்ரைஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

After 4 years vikram cobra movie shoot has wrapped

People looking for online information on கோப்ரா, விக்ரம், Cobra, Vikram will find this news story useful.